+91 44 28116770 +91 9710421880, 7299921880 |
![]() ![]() |
![]() |
AP001![]() Rs.350 |
AP002![]() Rs.350 |
AP003![]() Rs.250 |
AP004![]() Rs.300 |
AP005![]() Rs.550 |
AP006![]() Rs.425 |
AP007![]() Rs.425 |
AP008![]() Rs.750 |
AP009![]() Rs.300 |
AP010![]() Rs.250 |
AP011![]() Rs.500 |
AP012![]() Rs.300 |
AP013![]() Rs.525 |
AP014![]() Rs.600 |
AP015![]() Rs.810 |
AP019![]() Rs.780 |
![]() ![]() |
![]() |
|
வாசகர் மதிப்புரை ஜோதிடத்தின் ஆனி வேரென ஆன்றோர்கள் அறிவிப்பதும், மூல நூல்கள் பாடல்களில் மறைப்பொருளாய் எல்லோர்க்கும் எளிதில் புரியா வண்ணம் தெரிவிப்பதும், ஜாதகப் பலாபலன்கள் பகத்தறிவது எப்படி எனும் சூட்சமத்தின் சூத்திரமும், கர்ம கணக்கை கண்டறியும் சாத்திரமும் ஒன்றேயாகும். மக்கள் திறமையான ஜோதிடர்களிடம் சென்று இராசி, நவாம்சம், தசாபுத்தி, கோட்சாரம் என ஏனைய சூட்சுமங்களையும் அலசி ஆராய்ந்தும் கூட, சந்திப் பிழைகளை சரி செய்து பார்த்தாலும் கூட புரியாத புதிராய், விடை தெரியாத விடுகதையாய் பலநேரங்களில் சில ஜாதகப் பலன்கள் மாறுபடுகிறது. ஜோதிடர்களின் கணிப்பும், கருத்தும் வேறுபடுகிறது. இக்குறையை முற்றிலும் நீக்குவதற்கும் ஜோதிடத்தின் சூட்சுமத்தை எளிமையாய் யாவரும் கண்டறிவதற்கும், ஜோதிடர்களின் கணிப்பு முரண்பாடில்லாமல் மிக துல்லியமாய பலன்களுடன், பரிகாரங்கள் கூறி முன் ஜென்ம கர்ம வினைப்பயனை களைந்து பாரோர் இன்புற்று வாழ்வதற்கும் படைக்கப்பட்ட அருமையான நூல் திம்பசக்கரமாகும். மேலும் படிக்க >> |
![]() துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவிடும் திம்ப சக்கரம்ஆசிரியர்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவநாடி கலையரசு P.D.ஜெகதீஸ்வரன் M.C.A., M.Phil.விலை ரூ.350/-இந்நூல் பழங்கால ஜாதகாபரணம், ஹோரா ரத்னம் எனும் மூல நூல்களின் மறைப்பொருளாக துண்டி இராஜா மற்றும் பலபத்ரர் எனும் அருளாளர்களால் ஆழமான அரிய கருத்துக்கள் அடங்கிய இரகசியங்கள் முதன் முதலாக தமிழில் வெளிவந்த தனிப்பெருமை பெற்றது இந்நூல். இந்நூலில் குறிப்பிட்டுள்ளபடி பிறப்பின் ஆதாரமான இராசி சக்கரத்தை திம்ப சக்கரமாக மாற்றி அமைத்து ஆராய்ந்தால் எல்லாவிதமான கேள்விகளுக்கும் விடைகள் தெள்ளத் தெளிவாக விடை கிடைக்கும். இருளில் வழி தெரியாமல் தவிப்போர்க்கு பரிகாரங்ககளை கண்டறிந்து பலன் பெற்றிட வழி வகுத்து ஒளி கொடுத்து உள்ளளியை உணர்த்துவது இந்நூல். திம்ப சக்கரம் ஓர் அருமையான, முழுமையான பலன் உரைக்கும் முன்னிலை வகிக்க உதவும் நூல். இதில் ஏராளமான தகவல்கள் தாராளமாக பொதிந்துள்ளன. அவற்றை முழுமையாக படிப்பவர்களுக்கு கிரகங்களின் செயல்பாடுகள் தெள்ளத் தெளிவாக விளங்கும் தீர்க்க தரிசனம் பெற்றிட வழி வகுக்கும்.திம்ப சக்கரத்தில் கல்வி நிலை கண்டறியும் நிலை, திம்ப சக்கரத்தில் நோய் கண்டறியும் முறைகள், திம்ப சக்கரம் மூலம் கோட்சார பலன்களை எளிய முறையில் கண்டறியும் வழிகள், திம்ப சக்கரம் மூலம் உபாசனை சித்தியாகும் வழிகள், திம்ப சக்கர உதாரண ஜாதகர்கள் மூலம் திம்ப சக்கர திசை, புத்தி பலன்களை எளிதில் கண்டறியும் வழிகள் எல்லாம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கோட்சார நிலைகளை வைத்து சூட்சும திம்ப சக்கரம் இராசி திம்ப சக்கரம் கணிக்கும் முறைகள் எளிய நடையில் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத திம்ப சக்கர சூட்சும இரகசிய பரிகார குறிப்புகள் அத்தனையும் முத்துக்களாக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மிக துல்லிய பலனைக் காண படைக்கப்பட்ட அரிய பொக்கிஷம் தான் திம்ப சக்கரம். பரிகாரங்கள் மூலம் பலன்களைக் காண பல வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. திம்ப சக்கரம் நூலை ஜோதிடர்கள் படிக்கும் பாக்யம் பெற்றால் தங்கள் திறமைக்கு மணிமகுடமாய், சிகரத்தின் ஜீவ ஒளியாய் திகழ முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளித்திடும் உன்னத நூல். இறைவன் வகுத்த நியதியை அறிந்து இரகசியமான விதியை மிகத் துல்லியமாய் உணர்த்துவது இந்நூல். ஜோதிடர்கள் இந்நூலைப் படித்து பலன் பெறுவதற்கு பாதை வகுத்திடுவது திம்ப சக்கரம். |
![]() இறப்பின் இரகசிய புண்ணியச் சக்கரம்ஆசிரியர்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவநாடி கலையரசு P.D.ஜெகதீஸ்வரன் M.C.A., M.Phil.விலை ரூ.250/-ஒரு மனிதன் ஜெனன நேரத்தை வைத்து அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஜாதகம் மூலம் தெரிந்து கொள்கிறோம். அதேபோல் ஒரு மனிதன் மரண நேரத்தை வைத்து மரணத்தின் பின் அவனது ஆத்மா அடைகிற நிலையை கணிக்கப் பயன்படுவதுவே புண்ணியச் சக்கரம் எனும் ஜோதிட சூட்சுமக் கலையாகும். ஜோதிட ரீதியில் மரண நேரத்தை கணித்த உடனேயே அந்த ஆத்மா நல்ல நிலையில் உள்ளதா அல்லது தீய நிலையில் உள்ளதா என கண்டறிய முடியும். பிறந்த குழந்தைக்கு ஜாதகம் கணிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இறக்கும் ஆன்மாவுக்கும் புண்ணியச் சக்கரம் கணித்து ஆன்மாவின் சூட்சும நிலைகளை அறிந்து, அதற்கு ஏற்ப பாவ புண்ணியங்களை உணர்ந்து வாழும் ஆத்மாக்களுக்கு வளமான வாழ்க்கைக்கு வழி வகுக்க வேண்டும். பாவம் செய்து பரலோகம் போனாலும், நரலோகம் போனாலும் புண்ணியத்தைக் கொடுத்து புனர்ஜென்மம் எடுக்க வைக்க பூர்வ புண்ணிய சக்கரம் வழி வகுத்திடும். இதுவே சூட்சுமத்தை உணர்த்திடும் ஜோதிட சூத்திரம். இது போன்ற பல சூட்சுமங்களை உள்ளடக்கியது இந்நூல்.இந்நூலில், திருமுருக கிருபானந்த வாரியார், இரமண மகரிஷி, சத்ய சாய்பாபா, வேதாத்ரி மகரிஷி, யோகிராம் சூரத்குமார், வள்ளிமலை சுவாமிகள், விவேகானந்தர், அரவிந்தர், காஞ்சிப் பெரியவர், ஸ்ரீல பிரபுபாதா, ஸ்ரீசிவானந்த சரஸ்வதி, குன்றக்குடி அடிகளார், சாந்தானந்த சுவாமிகள் போன்ற மகான்களின் புண்ணிய சக்கரங்களுடன் அரிய செய்திகளோடு ஆணித்தரமான தீர்வுகளும் இந்நூலில் இடம் பெற்று இருப்பது திறமையான ஜோதிடத் தீர்வுகளுக்கு அச்சாரம் அளித்திடும் முத்தாரம். இந்நூலை வைத்திருப்பது மிகவும் அவசியம். எங்கு இறப்பு நடந்தாலும் அதற்கு வழிகாட்டும் வழிகாட்டியாக இந்த புத்தகம் திகழும் என்றால் அது மிகையல்ல. பீஷ்மர் கூட குறிப்பிட்ட நாள் வரை காத்திருந்து புண்ணிய உலகம் புகுந்ததை புண்ணியச் சக்கரத்தின் மையப்புள்ளியாக வைத்து அதையே அட்டைப்படமாக தாங்கியுள்ளது இந்நூல். இந்நூலைப் பயன்படுத்தி தங்களைச் சேர்ந்தவர்கள் புண்ணிய நிலையை அடைய இந்நூல் வழி வகுக்கும். |
வாசகர் மதிப்புரை மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்வில், நித்தமும், நிகழும் நிகழ்வுகளை உள்ளடக்கியது தான் இராசி சக்கரம் என்னும் ஜாதக கட்டமாகும். உடலைவிட்டு உயிர் பிரிந்த நேரம், நாள், நட்சத்திரம், திதி, ஊரை வைத்து, உயிர் பிரிந்த முன்னும், பிரிந்த பின்னும் ஆன்மாவின் நிலையை அறிந்திட உதவுவது தான் "இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரமாகும்". இது ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" திரு.P.D.ஜெகதீஸ்வரன் அவர்களின் முத்தான மற்றுமொரு வித்தான அரிய படைப்பு. மேலும் படிக்க >> |
வாசகர் மதிப்புரை மனிதர்கள் வாழும் சூழ்நிலைகளும், சூழும் சந்தர்ப்பங்களும் நாளும் பாவ புண்ணியம் பறை சாற்றும் கர்மாவிற்கு காரண காரியம் கற்பிக்கும் விதியாகி விட அவ்விதியின் சூட்சுமத்தை விரிவாய் உதாரண ஜாதகங்களுடன் விளக்கும் அற்புத அனுபவக் கற்பகக் களஞ்சிய நூல்தான் "ஞானம் அருளும் காலக் கண்ணாடி" ஆகும். நவக்கிரகங்கள் ஆளும் பன்னிரு இராசிகளும் 27 நட்சத்திரங்களும் கூறும் விஞ்ஞானமும் பல கோடி மனிதர்களை வேறுபடுத்தி ஆளுக்கொரு கணக்கை கூறுபடுத்தி வைத்தாலும், தன் உபாசனை சித்தியாலும், பலகால தவ சக்தியாலும், தீவிர பக்தியாலும், தேர்ந்த அனுபவ யுக்தியாலும் குருமார்களின் அனுகிரகத்தாலும், ஸ்ரீஞான ஸ்கந்தப் பெருமானின் அருளாசியினாலும் தன் இறை ஞானத்தால் விதியான காலக்கண்ணாடியை ஒவ்வொரு ஜோதிடரும் அறிய, கற்றுத் தெரிய, உலகோர்க்கென "ஸ்ரீஸ்கந்த உபாசகர்" "ஜீவ நாடி கலையரசு" திரு.P.D.ஜெகதீஸ்வரன் அவர்கள் படைத்த பொக்கிஷம் தான் "ஞானம் அருளும் காலக்கண்ணாடி". மேலும் படிக்க >> |
![]() ஞானம் அருளும் காலக்கண்ணாடிஆசிரியர்: ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவநாடி கலையரசு P.D.ஜெகதீஸ்வரன் M.C.A., M.Phil.விலை ரூ.300/-ஆன்மாவை அறிந்து கொள்வது தான் ஆன்மிகம். ஆன்மா சக்தியின் மூலம் இயங்குகின்றது. அந்த சக்தி சித்தத்தின் மூலம் சோம ஒளி, சூரிய ஒளி, அக்னி ஒளி ஆகிய மூன்றும் சேர்ந்ததே ஆன்மா. அந்த ஆன்மா நம் மூளையின் ஆயிரத்தெட்டு இதழ்த் தாமரைகளில் புருவ மத்தியில் அமைந்து இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள்.ஆகாராதியைத் துறந்து ஐம்புலன்களை உள்ளடக்கி அறிவை நிவேதனப் பொருளில் இலயிக்க வைத்து மனதை அக்ஷரத்தில் நிறுத்தி உடலை சமாதி யோகத்தில் அமர்த்தி, ஓராயிரம் ஆண்டுகள் மிகக் கடுமையான தவம் புரிந்தவர்கள் சித்தர்கள். மனிதனை மாமனிதனாக்கி, புனிதனாக்கி உயர்ந்தவனாக்கி காட்டுவதே ஆன்மிக ஒளி மனிதனை உயர வைத்து உய்விக்கும் ஞான ஒளி ஆன்மிகம். அந்த ஒளியை நாம் அடைய அறவழியை கடைபிடிக்க வேண்டும். ஆன்மிகத்தை உள்ளன்போடு உண்மையாக புரிந்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிலையை நாம் அடையும் போது தான், இறைவன் நம் இதயத்திலேயே இருக்கிறார் என்ற ஞானம் பிறக்கிறது. அப்போதுதான் மீண்டும் நமக்கும் இறைவனுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதுபோன்ற எண்ணற்ற செய்திகள் இந்நூலில் இடம் பெற்று உங்களுக்கு ஞானம் அருளும் வழிவகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற காலத்தை அறிவுறுத்திக் காட்டிடும் காலக் கண்ணாடியான ஜோதிடம் சம்மந்தப்பட்ட பல சூட்சும நிலைகளும், நவக்கிரகங்களின் செயல்பாடும் தெள்ளத் தெளிவாக இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மகான்களின் ஜாதக ஆய்வுகள், மந்திர சித்திகள் அருளும் தந்திர யோக பிரயோகங்கள், புகழைத் தரும் 10ஆம் இட புதையல் தொழில்கள் போன்ற பல அரிய அபூர்வ கட்டுரைகள் இதில் இடம் பெற்று ஜோதிடத்திற்கு புத்துயிர் கொடுத்து புதுப்பொலிவு பெற வைத்திட உதவிடும் உன்னத நூல். |
![]() மகத்துவம் தந்திடும் மஹா மந்திர விஞ்ஞைகள்ஆசிரியர்: சித்தர் அடியார் முருக உபாசகர் A.K.சந்தனராஜாவிலை ரூ.550/-இந்நூலில் பிரபஞ்ச இயக்கத்தை விஞ்ஞையில் மந்திர எழுத்துக்களால் அடக்கி, பூஜைகள் மூலம் உருவேற்றி தெய்வ கவசங்கள், மூல மந்திரங்கள் கொண்டும் கடவுளை வசியப்படுத்தும் சூத்திரங்கள், தந்திரங்களை வெளிப்படுத்தி உள்ளார். அஷ்ட கர்மம் முதற்கொண்டு பல தெய்வ வழிபாடுகள் செய்யும் விதம், உபாசகர்கள் உபாசனை தெய்வத்தை அணுக வேண்டிய வழி முறைகள் என யாவையும் மிக அருமையாய் இனிய இன்பத் தமிழால் விளக்கியுள்ளார்.மந்திரம் என்பது வேத மொழி, தந்திரம் என்பது அவற்றை செயல்படுத்த கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். யந்திரம் என்பது பிரபஞ்ச சக்தியை உள்ளிறுத்துவது. ஆகவேதான் ஆலயங்கள் பிரபஞ்ச சக்தியை உள்வாங்கி மக்களுக்கு கர்ம பலன்களையும் களையும் இடமாய், ஆண்டவன் அருள்ஜோதியாய் சூட்சும யந்திரங்களின் காட்சியாய் விளங்குகிறது. இதன் பொருட்டே இந்நூலில் திருமூலர் முதல் பல சித்தர்கள் அருளிய விஞ்ஞைகளின் அரியதொரு பயனை எடுத்துரைத்துள்ளனர். இதில் கூறப்பட்டுள்ள பூஜை முறைகளைக் கொண்டு நினைத்தவற்றை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஜோதிடர்கள், ஆலய அர்ச்சகர்கள், குருமார்கள் இதனை பயன்படுத்தி ஏற்றம் காணலாம். வாழ்வில் மாற்றங்கள் பெறலாம். மஹா மந்திர விஞ்ஞை வேத ஆன்மிக உலகிற்கு ஒரு சரித்திரம் படைத்திடும் ஒரு சகாப்தம். அறிவுக்கு எட்டாதப் பொருள் ஆன்மிக அருளால் கிட்டும் என்பதை மனமெனும் மாயத்திரையை விலக்கி, புலன்களின் புழுதிகளை அகத்தில் அகற்றி, புறத்தேக் கழுவி அனுதினமும் ஆண்டவனை அணுகும் விதிமுறைகளே மஹா மந்திர விஞ்ஞையாகும். இதில் சித்தர்களின் வரலாறு, மந்திரப் பிரயோக விதிமுறைகள் என பல சூட்சுமங்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. தரமானவற்றை தரணியில் தந்து தன்னகத்தே தக்கத் த¤றனைப் பெற்றுக் கொள்வதை இலட்சியமாகக் கொண்டு ஆன்மிகப் பேரொளியை அண்டத்திலிருக்கும் அற்புதங்களை பிண்டத்திலுள்ள உயிரினம் யாவும் நற்கதி அடைந்து நன்னிலைப் பெற்று நல்வண்ணம் வாழ நல்லோர் கைகளில் மஹா மந்திர விஞ்ஞை தவழ்ந்து எல்லோர்க்கும் நலம் சேர்க்கும் என்பது திண்ணம். |
வாசகர் மதிப்புரை மனிதன் தன் ஆன்மிக ஆற்றல் வளரவும், தெய்வீக தன்மை பெருகவும், பிரபஞ்ச சக்தியை உணரவும், பஞ்ச பூத செயல்பாடுகளை அறியவும், உறுதுணையாக உதவுவது, உபாசனை மற்றும் மந்திர, தந்திர, யந்திர பிரயோக வழிபாட்டு முறைகளாகும். இதில் யந்திரம் ஒன்றே இம்மூன்றையும் தன்னுள் உள்ளடக்கி பிரதானமாய் திகழ்கிறது. ஆண்டவன் ஆயிரமாயிர ஆண்டு காலமாய் ஆலய கர்ப கிரகத்துள் வீற்றிருந்து, நிலைத்து, என்றென்றும் மக்களுக்கு அருள் மாரி பொழியச் செய்விப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று சித்தர்களின் ஜீவசமாதி மற்றொன்று உருவேற்றப்பட்ட யந்திரங்கள். ஷண்மதத்தை தோற்றுவித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் கால் நடையாகவே சுற்றி, பல ஆலயங்களுக்கு சென்று, தன் மந்திர சக்தியால் உருவேற்றிய யந்திரங்களை பிரதிஷ்டை செய்து ஆலயத்திற்கு உயிரூட்டினார். அழிந்து வரும் இக்கலையை குரு பரம்பரை மூலம் முதன் முறையாய் தமிழில் தன் அறுபதாண்டு கால வரசித்தியால், அருட் சக்தியால், தவ யுக்தியால், திருமுருகப் பெருமானின் கருணையால், சித்தர் பெருமக்களின் தரிசனத்தால், சித்தர் அடியார் டாக்டர் கி.ரி.சந்தன இராஜா ஐயா அவர்களால் அருளப்பட்ட அற்புத நூல் தான் "மகத்துவம் தந்திடும் மஹா மந்திர விஞ்ஞைகள்". மேலும் படிக்க >> |