
பஞ்சாங்கம் படிப்பதின் பலன்கள்
- திதியைத் தெரிந்துக் கொள்வது வாழ்வில் செல்வம் பெருகும்
- வாரம், கிழமையை அறிந்து செயல்படுவது ஆயுள் பலம் கூடும்
- நட்சத்திரம் அறிந்து அதன் வழியே நடந்துக் கொண்டால் பாவங்கள் விலகும் கர்ம வினைகள் கலையும்
- யோகத்தை அறிந்துக் கொள்வதால் நோய் விலகும். நிவாரணம் நிதசர்னமாகும்
- கரணத்தை அறிந்து செயல்பட்டால் எடுத்த காரியம் வெற்றி பெற்று ஏற்றத்தைக் கொடுக்கும்
| |
"திருவருள் சுத்தத் திருக்கணித பஞ்சாங்கம்" மன்மத வருட பஞ்சாங்கம், 2015 கடந்த மார்ச் 2015 "குருவருள் ஜோதிடம்" இதழுடனும், ஏப்ரல் 2015 "திருவருள் சக்தி" இதழுடனும் இணைப்பு
இதழாக வெளியிட்டு வாசகர்களின் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வரும் துன்முகி வருடம் 2016 முதல் தனி இதழாக ஆண்டுதோறும் வெளிவரும்.
பஞ்ச அங்கங்களும் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டதே பஞ்சாங்கம். முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தை முழுமையாக உணர வைப்பதே பஞ்சாங்கம். வான சாஸ்திரத்தை வகுத்தளித்து மனித வாழ்வை
பகுத்தளிக்கும் ஜோதிடத்திற்கு துணை புரிவது பஞ்சாங்கம். வாழும் வாழ்வை வளமாக்க வழி வகுத்துக் கொள்ள, நல்வழி காட்டுவதே பஞ்சாங்கம். திதி, வாரம் நட்சத்திரம், யோகம், கரணம் எனும் ஐந்து
அம்சங்களையும் அறிந்து, உணர்ந்து வாழ¢வை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கு அடிகோலுவது பஞ்சாங்கம். எனவே ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டியது "திருவருள் சக்தி சுத்த
திருக்கணித பஞ்சாங்கம்" .
|