"திருவருள் சக்தி" ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவ மாத இதழ், விய வருடம் 2006இல் தொடங்கப்பட்டு மே 2006 முதல் இதழாக வெளி வந்து இப்போது 10ஆம் ஆண்டில் பவனி வருகிறது.
மணி, மந்திரம், ஒளசதம் எனும் சித்தர்களின் முப்பெரும் கலைகளையும் தன்னகத்தே தாங்கி வெளி வந்துக் கொண்டு வாசர்களின் சிறப்பான வரவேற்புடன் சீர்நடை போட்டு பவனி வருகிறது.
ஆன்மிகம்: மனிதனை மாமனிதனாக்கி பூமியில் வாழும் தகுதியைப் பெற்றிடும் புனிதனாக்கி உயர்ந்தவனாக்கி உயர்த்திக் காட்டுவது
ஆன்மிகம். மனிதனிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்குவது ஆன்மிகம். இருளை நீக்கி ஒளியை ஏற்றி நல்ல வழிகளைக் காட்டி உழைக்க வைக்க தன்னம்பிக்கை ஊட்டுவது ஆன்மிகம். இறைவன்
மனித உயிருக்குத் தந்த, விலை மதிக்க முடியாத வரப்பிரசாதம் ஆன்மிகம். மனிதனை உயர வைத்து உய்விக்கும் ஞான ஒளி ஆன்மிகம். மனிதனின் மன அழுக்கைப் போக்கி மன நிம்மதி தருவது ஆன்மிகம்.
ஜோதிடம்: ஒரு மனிதனை பலப்படுத்துவதும் பலவீனப்படுத்துவதும், அவன் பிறக்கும்போது ஏற்படும் கிரகப் பலன்களே. அதை வைத்தே
அவன், அவனுடைய வாழ்க்கையின் நிலை, சந்திக்கப்போகும் பிரச்சனைகள் பாவ புண்ணிய பலாபலன்கள், பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பு அவனுக்கு அமையும் மனைவி அதனால் அவனுக்கு ஏற்படப்
போகும் ஏற்றம், இறக்கம், வாழ்க்கை அமைப்பு ஆகியவைகளை மிகத்துல்லியமாகக் கணக்கிட்டுப் பார்த்தால், அவை அத்தனையும் உண்மை என்பதை ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறிந்துக் கொள்ள முடியும்
என்பது ஆணித்தரமான அசைக்க முடியாத உண்மை. ஜோதிட சாஸ்திரத்தின் உண்மையை உணரக்கூடிய நிகழ்வுகளை உணர்ந்துக் கொண்டோமேயானால் நம் வாழ்க்கையை சீரோடும் சிறப்போடும் அமைத்துக்
கொண்டு வழி நடத்த உதவுவது ஜோதிடமாகவே இருக்கும்.
மருத்துவம்: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" இது உணர்ந்துக் கொண்டவர்கள் உணர்த்தும் உண்மை நிலை. வியாதி
வருவதற்கு முன் தடுக்கும் தன்மை, வந்த பிறகு குணப்படுத்துவதற்கு முற்படும் சமயோஜித நடவடிக்கை இனி வராமல் பார்த்துக் கொள்ள நாம் வழிவகை காண்பது தான் மருத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்வதின் பலன். அவை ஆயுர்வேதம், சித்த வைத்தியம், யுனானி ஓமியோபதி, அலோபதி (ஆங்கில மருத்துவம்) போன்ற எந்த வகை மருத்துவமாக இருந்தாலும் அவை நம் நோயற்ற வாழ்வுக்கு துணை நிற்பதில் ஒன்றேயாகும்.
நம் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசியமாக இருக்கும் இந்த ஆன்மிகம், ஜோதிடம், மருத்துவம் ஆகிய முத்தான மூன்று பகுதிகளையும் தன்னகத்தே தாங்கி, அந்தந்தத் துறைகளில் சிறந்து விளங்கும், ஆன்றோர்களும், சான்றோர்களும், ஆன்மிகத்தின் ஆணிவேராக அமைந்த ஞானிகளின் கட்டுரைகளும் அவர்களின் அனுபவ உண்மைகளும் "திருவருள் சக்தி" இதழில் தொடர்ந்து இடம் பெற்று வாசர்களின் ஏகோபித்த பாராட்டுகளுடன் வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
"திருவருள் சக்தி" இதழை தொடர்ந்து படித்து வந்தால் வாழ்வில் ஏற்றம் காண்பதற்கு ஏதுவாகும்.
"திருவருள் சக்தி" உங்கள் சங்கடங்களைத் தீர்த்து சக்தியின் பேரருள் கிடைத்திட வழி காட்டும், உங்கள் வாழ்க்கைக்கு மெருகூட்டும், உங்கள் உயர்வுக்கு உயிரூட்டும்.
"திருவருள்" பஞ்சாட்சரம், "சக்தி" மூன்று அட்சரம், மும்மலங்களைப் போக்கும். "திருவருள் சக்தி" அஷ்டாச்சரம். திருமால், திருச்சிற்றம்பலத்தான், சக்தி & மூவுலகையும் காக்கும் முப்பெரும் சக்திகள். மூன்றும் ஒன்றாய் இணைந்து முத்தமிழ் போற்றும் "திருவருள் சக்தி" ஆன்மிகம் தழைத்தோங்கும் ஆலவிருட்சம்.