அப்ஸரா பப்ளிகேஷன்ஸ்
(About Apsara Publications)
கடந்த 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அப்ஸரா பப்ளிகேஷன்ஸ், இன்று "திருவருள் சக்தி", "குருவருள் ஜோதிடம்" மற்றும் "அப்ஸரா நாவல்" மாத இதழ்களையும், "திருவருள் சக்தி சுத்த திருக்கணித பஞ்சாங்கம்"
ஆண்டு இதழையும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.
இது தவிர
- குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை
- துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவிடும் திம்ப சக்கரம்
- இறப்பின் இரகசிய புண்ணியச் சக்கரம்
- ஞானம் அருளும் காலக்கண்ணாடி
- மகத்துவம் தந்திடும் மஹாமந்திர விஞ்ஞைகள்
எனும்
ஐம்பெரும் நூல்கள், மன்மத வருடம் 2015 தமிழ் புத்தாண்டு (14.4.2015) அன்று வெளியிடப்பட்டது. இது வாசகர்களிடையே
சிறந்த வரவேற்பைப் பெற்று விற்பனையாகிக் கொண்டு இருக்கிறது.
 |  |
ஸ்கந்த உபாசகர் ஜீவநாடி கலையரசு ஸ்ரீ P.D.ஜெகதீஸ்வரன் M.C.A., M.Phil. நிர்வாக நிலைக்குழுத் தலைவர் |
ஸ்ரீ எம்.எஸ். கிருஷ்ணா தலைமை நிர்வாகி |
அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் உரிமையாளரும் வெளியீட்டாளர் ஆசிரியர்
சித்தர் அடிமை ஸ்ரீ சி.இராஜு, தலைமை நிர்வாகி ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா, நிர்வாக
நிலைக்குழுத் தலைவர் ஸ்கந்த உபாசகர் ஜீவநாடி கலையரசு ஸ்ரீ P.D.ஜெகதீஸ்வரன் M.C.A., M.Phil., குழுவினரின் இயக்கத்தில் சிறந்த நிர்வாகமாக நிர்வகிக்கப்பட்டு இயங்குகிறது.
ஆசிரியரைப் பற்றி ஓர் அலசல்(About the Editor)
ஆசிரியர் சித்தர் அடிமை ஸ்ரீ சி.இராஜு அவர்கள், கருமமே கண்ணாய் இருந்து கச்சிதமாய் அனைத்து வேலைகளையும் காலத்தே முடிப்பவர். உழைப்புக்கு அஞ்சாதவர். இரவு பகல் பாராது உழைத்து உண்மையான சேவைகளை ஊருக்கும், உலகிற்கும்
செய்வதையே குறிக்கோளாகக் கொண்டவர். அதனால் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பத்திரிகைத் தொழிலை பாங்குடன் செய்து வருகிறார். பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வகை வகையான சிறந்த
படைப்புகளை மக்களின் அன்றாட வாழ்விற்கு அனுசரனையுடன் கட்டுரைகளை தாங்கி "திருவருள் சக்தி", "குருவருள் ஜோதிடம்" ஆகிய மாத இதழ்களை வெளியிட்டு வருகிறார்
மிகக் கடுமையான சோதனைகளுக்கு மத்தியிலும் கடின உழைப்பின் மூலம் குறித்த காலத்தில் மாதந்தோறும் வெளியிட்டு வருவது வாசர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுத் திகழ்கிறார்..
"அப்ஸரா நாவல்", "திருவருள் சக்தி சுத்த திருக்கணித பஞ்சாங்கம்" ஆகியவைகளையும் வெளியிட்டு வருவதுடன், மக்களின் பசிப்பிணி போக்கும் முயற்சியில் "திருவருள் சக்தி அன்னதான அறக்கட்டளை" தொடங்கி அருட்பணியில் ஆண்டவனின் திருப்பணியை
திறம்பட செயல்படுத்தி வருகிறார்.
பத்திரிகைத் தொழிலில் 45 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதற்கு இவர் மாதந்தோறும் எழுதுகின்ற தலையங்கமே தரமான நிலைக்கு திடமான சாட்சியாகும். இவரும் எழுத்தாளராக இருந்துக் கொண்டு பல எழுத்தாளர்களை உருவாக்கி
பல சாதனையாளர்களை முன்னிலைப்படுத்தி வருகிறார். இவர் உருவாக்கி உயர்த்தி விட்டு வானுயர உயர்ந்தவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள். இயற்கையாகவே இறையருளும் சித்தர்கள் ஆசியும் நிரம்பப் பெற்றவர் என்பதற்கு இவர் செய்து வருகின்ற திருப்பணியே
அருட்சாட்சியாகும்.
எதுகை மோனையோடு மிக அருமையான தலைப்பை வைத்து அந்த கட்டுரை முழுவதிலும் அடங்கிய கருத்துக்களை எளிய முறையில் இரண்டு வரியிலேயே புரிய வைத்து விடுவார். படங்களை வைத்து பாடங்களை போதிக்கும் திறமை இவருக்கு இறைவன் தந்திட்ட
அருட்பிரசாதம். எந்தக் கட்டுரையாளரிடம் எந்த திறமை உள்ளது என்பதை உணர்ந்து அவர்களை உரிய வழியில் பயன்படுத்தி உலக மக்களுக்கு நன்மை செய்யும் குறிக்கோளில் தன்னலம் கருதாது தரணி நலம் ஒன்றையே கருத்தில் கொண்டு தரமான சேவைகள்
பலவற்றை தன்னிகரில்லாமல் செய்து வருகிறார். சுய விளம்பரத்தை வெறுத்து பிறர் விளம்பரத்தை பெரிதுபடுத்தி அவர்களை விருத்தியடைய வைப்பதில் விருப்பம் உடையவராகத் திகழ்ந்து வருகிறார்..
பத்திரிகைத் துறையில் பலர் போற்றும் வகையில் சிறந்த சாதனை புரிந்த இவர், இன்று 17 பதிப்புகளைக் கொண்ட முன்னணி காலை தமிழ் நாளிதழில் 15 வருட காலம் பணியாற்றியவர். சொந்த அச்சகத் தொழில் தொடங்கி 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.
45ஆண்டு காலம் பத்திரிகை அனுபவம் பெற்றவர். கடந்த 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "திருவருள் சக்தி" ஆன்மிக மாத இதழ் இன்று 10ஆம் ஆண்டில் பவனி வந்துக் கொண்டு இருக்கிறது. கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "குருவருள் ஜோதிடம்"
நெ.1 ஜோதிடத்திறனாய்வு மாத இதழ் இன்று 7ஆம் ஆண்டை எட்டிப் பிடித்து ஏற்றம் கண்டு முதல் இடம் பிடித்து முன்னிலை வகிக்கிறது. "அப்ஸரா நாவல்" திருவருள் சக்தி சுத்த திருக்கணித பஞ்சாங்கம் ஆகியவற்றின் பதிப்பாசிரியராக பவனி வந்துக் கொண்டு
இருக்கிறார்.
நல்ல எண்ணம் நல்ல ஒழுக்கம், நன்னடத்தை, நல்லோர்களின் நல்வாக்கினை நலமுடன் பெற்று, வளமுடன் வாழ்ந்து, பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நல்வாழ்த்துக்களுடன் இந்த
e-Magazine பகுதி தொடங்கப்பட்டு உள்ளது.