+91 44 28116770 +91 9710421880, 7299921880 |
![]() ![]() |
![]() |
![]() வேத ஜோதிடர்
திருவருள் சக்தி, குருவருள் ஜோதிடம் ஆசிரியர் சித்தர் அடிமை ஸ்ரீ சி.இராஜூ ஐயா அவர்களது அருந்தவப்பெரும் காவிய காப்பியக் களஞ்சிய கற்பக விருட்ஷமே "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை".
ஒரே நூலில் ஓராயிரதிற்கும் மேலான தகவல்கள், தத்துவங்கள், ஆன்மீகம், ஜோதிடம், மகான்களின் வரலாறு, விழாக்கள் கொண்டாடப்பட வேண்டிய விதங்கள், விபரங்கள் விளக்கங்களுடன் சித்தர்கள், சித்துக்கள்
என இன்னும் பல அரிய விஷய ஞானங்கள் ஒருங்கே கொண்டு விசேஷமாய், பக்தி, கர்மம், யோகம், ஞான மார்க்கங்களைப் பற்றி எவருமே இதுவரை அறிவிக்காத பல அற்புத, அரிய இரகசியங்களின்
பொக்கிஷங்கள் அடங்கிய பேரருளே "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை".
கணிப்பொறி யுகத்தில் மனிதர்கள் மனித நேயதகுருவருள் காட்டிடும் திருவருள் மகிமை மதிப்புரைதை விடுத்து பணத்தை மட்டுமே பிரதானமாய் துதித்து, மற்றவரிடம் யாசித்து நாளும் பொழுதும் துன்பத்திற்கு ஆதாரமாய் விளங்குவது, அதனால் விளையும்
அலங்கோலங்கள் எல்லாம் அரங்கேறுவது யாவும் அறியாமை எனும் அஞ்ஞானமே. காரண, காரியங்கள் கூறி நல்வழி நடத்தி, அறநெறி தெரிவித்த முன்னோர்களை முழுமையாக மறந்து அதனால் துன்பத்தின்
விளிம்பில் துவண்டு பரிகாரங்களைத் தேடி, ஆலயத்தை நோக்கி, முழுமையான பக்தியின்றி படை எடுத்திடும் காட்சி அன்றாட வாழ்வின் அவலத்திற்கு காட்சியாகிறது. செய்த பாவ கர்மத்திற்கு தான தர்மம் மட்டுமெ
பரிகாரமாக அமையும் எனும் சூட்சுமத்தை உணராது, பாவத்தின் பலனால் குருவின்றி திருவை அடைய முடியாமல் துன்பத்தைத் தழுவுகின்றனர். உண்மையான குருவை அடைய வேண்டுமானால் பெரியோரை
மதித்தலும், போற்றி துதித்தலும், அவர்களின் அனுபவ அறிவுரைகளைக் கேட்டு நடத்தலும், நல்லோர் மனம் கோணாது, நன்னெறி மறவாது இன்மொழி கேட்டு உரைத்தாலன்றி குருவின் திருவருளை ஒரு நாளும்
பெற முடியாது. ஆனால் இன்றோ குருவைத் தேடி ஓடுகிறார்கள் போலிகளின் பின்னால் பல சீடர்கள், பின் உண்மையை உணர்ந்து வருந்துகின்றனர். மனம் வாடுகின்றனர். காலம் கடந்து மனம் மாற்றம் பெறுகின்றனர்.
உண்மையான குரு என்றால் அஞ்ஞான இருளை நீக்கி, மெய்ஞான அருளை உபதேசித்து, தீர்க்க தரிசனத் தத்துவத்தை திரிகாலமும் உணர்த்தி, எண்ணம், சொல், செயல் எல்லாம் நலம் பெறச் செய்து வழி
நடத்திடும் திறமையோடு பரபிரம்ம தத்துவத்தை போதிக்க வேண்டும். மன மாயைகள் விலக்கி ஞான அருளாய் ஒளி தருபவரே உண்மையான குருவாகும் தகுதியைப் பெற முடியும் என்பதை சத்குருவாய் சித்தர்
அடிமை ஸ்ரீ சி.இராஜூ ஐயா அவர்கள் படைத்த இந்நூல் விளங்குகிறது. எல்லோருக்கும் ஞான உபதேசங்கள் போதித்து அருள் தத்துவங்களை உணர்த்தி குருவருளுக்கு துணை நின்று திருவருளைப் பெற வழிகாட்டும்
அற்புத நூல்.
இந்நூல் உருவாகக் காரணம், ஒவ்வொரு மனிதனும் தரணியில் தன்னிலை உணர்ந்து, மதிமயங்காது உலகியல் வாழ்வில் நிமிர்ந்து, எல்லாவற்றுக்கும் காரண காரியங்கள் அறிந்து, கர்ம பலனைக் களைந்து வெற்றி பெற பதினோறு அத்தியாயங்களாகப் பிரித்து முத்தாரமாய் கொடுக்கப்பட்டு உள்ளது. அவை:
ஓங்கார ரூபமாய் நாயகர்களுக்கெல்லாம் தலைவனாய், முதல்வனாய் விக்னங்களை வேரறுப்பவனான முழுமுதற் பரம்பொருளான விநாயகப் பெருமானின் அருமை பெருமைகளை பிள்ளையார் சுழியின் சூட்சும இரகசிய மகத்துவத்துடன் துவங்குகிறது காப்புக் கவசம். அடுத்து அறிமுகத்தன் திருமுகமாக வருவது அத்வைத அனுஷ்ரானங்கள். ஆதிசங்கரர் அருளிய அத்வைதத்தில் சக்தியை போற்றும் சாகத வழிபாட்டு பூஜை முறைகள், பஞ்ச சக்திகளான இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, பராசக்தி, ஆதி சக்தியின் பெருமை வாய்ந்த ஸ்தல வரலாற்று குறிப்புகள் மற்றும் சப்த மாதர்களின் சொரூபங்கள் இடம் பெற்றுள்ளன, அன்னையின் அருளைப் பெற்ற "திருவருள் சக்தி" தோன்றக் காரணமும் ஆன்மீக ஜோதிடம், மருத்துவம் என் இதழின் விளக்கமும் தரப்பட்டுள்ளது.
"குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை" நூலே ஒவ்வொருவருக்கும் குருவாகி மாந்தர் தாமே திருவை அடைய வழிவகுக்கிறது. ஆத்ம கடலில், கர்ம அலைகளுக்கிடையே, பாவ சூழலில் சிக்கிய நீர் குமிழியான மனித பிறவிகள் தேடும் சாந்தியை, முக்தியை அருளும் ஆதி குருவீ தென்முக கடவுளான சிவபெருமான். மனம் திறந்தால் புலன்கள் ஒடுங்கும் எனும் தத்துவத்தை வேதத்தின் நாதத்தை மெளனமாக பிரம்ம புத்திரர்கள் உணர உபதேசித்த வேத நாயகனை பற்றிய ஞான வரிகள் மிக அருமையாக குருவருள் என்றும் குறைவிலா நிறையருளாகிறது. குருவையே ஈஸ்வரனாய காண்பின் அனைத்தும் துளங்கும் என குருவின் பெருமையை உச்சத்தில் உயர்த்தி வைக்கிறார் சித்தர் அடிமை ஐயா அவர்கள்.
இறைவனயே குருவாய் கண்டவர்களுக்கு குரு கிடைக்கப்பெறுவது உறுதி, கிடைத்த பின் குருவையே இறைவனாய் கருத வேண்டும் என முழங்கி குருவே சரணம் நிறைவே தரணும் என்ரு ஆன்மிக உலகில் மாபெரும் குருவாக யாவரும் ஏற்றுக் கொண்டு வழிபட்டு வரும் மகான்களின் வரலாற்று குறிப்புகள், ஞான உபதேசங்கள், ஆன்ம விளக்கங்கள், மிக அருமையாக தொகுத்து வகுத்துத் தரப்பட்டுள்ளது. இதில் ரமண மகரிஶி, ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாவீரர், ஆதிசங்கரர், புதுச்சேரி அன்னை, தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி, பாம்பன் சுவாமிகள் மற்றும் வள்ளலாரின் வாழ்க்கை குறிப்புகள் போதனைகள் அனைத்தும் அடங்கப் பெற்ற பெட்டகமாக விளங்குகிறது.
மணி, மந்தரம், ஒளஷதம் இதுவே சித்தர்கள் கையாண்ட சூத்திர முத்திரைகள். இதில் மணி என குறிப்பிடப்படுவது ஜோதிடமாகும். விதியை அறிவிக்கும் ஜோதிடைத்தை பற்றிய அரிய பல தகவல்கள் அடங்கிய பொக்கிஷ தொகுப்புதான் ஜோதிட சூட்சுமங்கள் மாட்சிமை புரிந்திடும் மகத்துவங்கள். இதில் 42 தலைப்புகளின் கீழ் ஜோதிடர்கள் இதுவரை அறிந்திடாத, அறிய வேண்டிய அரிய பல முக்கிய சூட்சுமங்கள் இவற்றில் இடம் பெற்றுள்ளன. இவற்றை படித்தாலே மிக எளிமையாக ஜோதிட சாஸ்திரத்தை நன்கு உரைக்க முடியும். இது ஜோதிடர்களுக்கு கிடைத்திடும் பொக்கிஷமாகும்.
ஆன்மிக உலகில் இறைவனை அடையும் மார்க்கங்களாக முன்னோர்கள் வகுத்தது பக்தி, கர்மம், யோகம், ஞானமாகும். இவற்றை அருமையான விளக்கங்களுடன் கடவுளை எளிதாய் பிரார்த்தனை மூலமே அடையவும் விழாக்களின் விபரமும் தனிமனித ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைகளின் சாராம்சமும் கொண்டு கர்மாவை போக்கி, மனித பிறவிகள் இன்புற வழிவகையாக வகுத்துள்ளார் சித்தர் அடிமை ஐயா அவர்கள். மனித பிறவி எடுத்த அனைவருமே துன்பத்தில் உழல வேண்டிய கட்டாயம் கலியுக நீதி, கர்மாவின் விதியாகும். இதை அறிந்தே குருவை தேடு பின் மனமே குருவாக திருவருளை பற்றி பக்தி, கர்மம், யோக ஞானமுறைகளில் ஒன்றை பற்றி இறைவனை அடையும் சூட்சுமத்தை வெளியிட்டுள்ளார்.
மனம் அமைதி பெற்றாலே நிம்மதியை உணர முடியும். கரைபடிந்து நிற்பவரே அலை முற்றத்திற்கு ஆளாவார். கடல் நடுவே ஆழமும், அமைதியும், ஆனந்தமும் எழில் மயமாகவே காட்சி தரும். அப்படி குருவருள் காட்டிடும் திருவருள் மகிமையில் மூழ்கியோர் நிச்சயம் இறையருளை பெற்றிடும் பேரானந்ததை அடைந்தே தீருவர்.
"சித்தர்கள் உலா பக்திக்கு நிலா"வில் சித்தர்களைப் பற்றிய ஏராளமான குறிப்புகள் தாராளமாய் இடம் பெற்றுள்ளது. காப்பு கவசத்தில் தொடங்கி பக்தி, கர்மம், யோகம், ஞான மார்க்கமே "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை" என் முடித்து எல்லோர் வாழ்வில் பேரின்ப பேரொளியை ஏற்றி ஏற்றம் கண்டிட சீர்மிகு தேராக மாபெரும் மாற்றம் தந்து பவனி வருகிறார் சித்தர் அடிமை ஐயா அவர்கள். திருவருளைப் பெற விரும்புவோர் குருவை நாட வேண்டும், குருவருளை தேடுவோர் நிச்சயம் "குருவருள் காட்டிடும் திருவருள் மகிமை" நூலை வாங்கிப்படித்து வாழ்வில் மகா பாக்கியம் அடைய முடியும். |