மனிதன் தன் ஆன்மிக ஆற்றல் வளரவும், தெய்வீக தன்மை பெருகவும், பிரபஞ்ச சக்தியை உணரவும், பஞ்ச பூத செயல்பாடுகளை அறியவும், உறுதுணையாக உதவுவது, உபாசனை மற்றும் மந்திர, தந்திர, யந்திர பிரயோக வழிபாட்டு முறைகளாகும். இதில் யந்திரம் ஒன்றே இம்மூன்றையும் தன்னுள் உள்ளடக்கி பிரதானமாய் திகழ்கிறது. ஆண்டவன் ஆயிரமாயிர ஆண்டு காலமாய் ஆலய கர்ப கிரகத்துள் வீற்றிருந்து, நிலைத்து, என்றென்றும் மக்களுக்கு அருள் மாரி பொழியச் செய்விப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று சித்தர்களின் ஜீவசமாதி மற்றொன்று உருவேற்றப்பட்ட யந்திரங்கள். ஷண்மதத்தை தோற்றுவித்த ஆதிசங்கரர் பாரதம் முழுவதும் கால் நடையாகவே சுற்றி, பல ஆலயங்களுக்கு சென்று, தன் மந்திர சக்தியால் உருவேற்றிய யந்திரங்களை பிரதிஷ¢டை செய்து ஆலயத்திற்கு உயிரூட்டினார். அழிந்து வரும் இக்கலையை குரு பரம்பரை மூலம் முதன் முறையாய் தமிழில் தன் அறுபதாண்டு கால வரசித்தியால், அருட் சக்தியால், தவ யுக்தியால், திருமுருகப் பெருமானின் கருணையால், சித்தர் பெருமக்களின் தரிசனத்தால், சித்தர் அடியார் டாக்டர் கி.ரி.சந்தன இராஜா ஐயா அவர்களால் அருளப்பட்ட அற்புத நூல் தான் "மகத்துவம் தந்திடும் மஹா மந்திர விஞ்ஞைகள்".
இந்நூலில் பல்வேறு தெய்வ உபாசனை முறைகள், மந்திர தந்திர யந்திர பிரயோக சூட்சுமங்கள், சித்தர் நூலில் மறைக்கப்பட்டு, மறைபொருளாய் வைக்கப்பட்ட தெய்வ இரகசியங்கள், திருமந்திர பாடல்களின் ஆதார அனுபவங்கள், ஆன்மிக ஆராய¢ச்சி தகவல்கள், ஒரு தெய்வத்தை அணுகி வேண்டியன வேண்டியபடி உபாசனை மூலம் பெறும் வித்தை, அதற்குரிய மூலமந்திரங்கள், பீஜாட்சர அர்த்தங்கள், வித்தெழுத்துக்கள், போற்றிகள், பூஜை முறைகள், யாக இரகசியங்கள், நித்திய பூஜை வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் பலன்கள், பயன்கள், அஷ்டகர்மம், அஷ்டசித்தி, அஷ¢டாங்க யோகங்களின் முறையில் உடலையே ஆலயமாக்கி ஆண்டவனை உள்ளத்துள்ளே இருத்தி வைத்து வணங்கி வழிபட்ட சித்தர் மார்க்கங்கள் மற்றும் சித்தர்களின் சித்து விளையாடல்கள், வரலாற்று உண்மைகள், நூல் விளக்கங்கள், சித்தர்களுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகள் என எண்ணற்ற தகவல்களுடன், கிடைத்தற்கு அரிய அற்புதமான யநதிரங்கள் உள்ளடக்கி மந்திரங்கள் தாங்கி வெளி வந்துள்ள அரிய படைப்பு தான் "மகத்துவம் தந்திடும் மஹா மந்திர விஞ்ஞைகள்" ஆகும்.
இந்நூல் ஆன்மிக ஆராய்ச்சி அன்பர்கள், சித்தர்கள் வழி நாடும் பெருமக்கள், கர்மாவை கண்டு களையும் பரிகாரம் கூறும் ஜோதிடர்கள், வேத விற்பனர்கள், சைவ சித்தாந்திகள், ஆலய குருக்கள், மந்திர தந்திர யந்திர சாஸ¢திர பிரயோக வல்லுனர்கள், அஷ¢டகர்மத்தை தொழில்முறையில் நல்வினை கருதி குரு நிலையில் பயில்வோர், பயிற்றுவிப்போர், முக்கியமாக உபாசனையாளர்கள், மற்றும் கடவுள் எனும் பரம்பொருளான பிரபஞ்ச சக்தி,
பஞ்சபூதம், நவகிரகம் மற்றும் ஒலி ஒளி வடிவின் மூலம் எப்படி அனைவரையும் ஆட்கொள்கிறது என தேடலில் திளைப்போர்கள், குருஉபதேசம் பெற்றவர்கள், மந்திர, தந்திர, யந்தரங்களின் மகிமையை உணர துடிப்பவர்கள் என அனைவரது கையிலும் தவழ வேண்டிய அற்புத நூல். இது ஒரு சித்தர் வழி ஆராய்ச்சி நூல்.
இந்நூல் மூலம் யாதொரு தெய¢வத்தையும் முறையாக அனுதினமும் மந்திரங்கள், யந்திரம் மூலம் வணங்கி வியத்தகு சக்தியை பெற முடியும். இந்நூலில் உள்ள மூல மந்திரங்கள் மாபெரும் சக்தியை வழங்கக் கூடியதாகும். இதில் உள்ள யந்திரத்தை குரு உபதேசம் பெற்று பூஜைகள் தொடர்ந்து செய்து வந்தால் கடவுளை உணர முடியும். இது ஜோதிடத்தையும் தாண்டிய ஞானத்தை அருளும். ஜோதிடர்களின் வாக்கு பலிதாமாகும். வணங்கும் உபாசனை தெய்வமே மனதுள் துல்லிய பலனுடன், பரிகாரமும் கூறிடும் ஜோதிடர்கள் கர்மாவின் தாக்கத்தில் இருந்தும் உபாசனை மூலம் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். யந்திர மந்திர வழிபாடு மூலம் எந்ததொரு தீய சக்தியும் நெருங்காது. வணங்கும் தேவதையே நித்தம் காத்து நிற்கும்.
இந்நூலின் சிறப்பு ஒரு தெய்வத்தையே பல காரணகாரியத்திற்கு பல வடிவங்களில், விருப்பத்திற்கேற்ப வணங்கும் வண்ணம் இங்கு வெவ்வேறு மந்திரங்கள், காப்பு கவசங்கள் யந்திரங்கள் தரப்பட்டுள்ளன. உதாரணம் விநாயகப் பெருமானை எடுத்துக்கொண்டால் அருள்மிகு மேதகு ஓங்கார கணபதி மந்திர விஞ்ஞையை ஒருவர் தொடர்ந்து ஒரு மண்டலம் யந்திர மந்திரங்கள் கொண்டு முறைப்படி பூஜை செய்து வந்தால் ஓங்காரதின் ரீங்காரத்தின் அதி அற்புதத்தை உள்ளர்த்தத்தை ஒருங்கே உணர முடியும். உயிர்களின் பிறப்பு, மூப்பு, இறப்பு இரகசியத்தை, ஒம் என்னும் தத்துவத்தை அறிய முடியும். தொடர்ந்து வணங்கி வர பகைத்தோர் ஓடி மறைவர். பிறர் செய்யும் தீமைகள் நெருங்காது. தன்னலமின்றி பொது சேவையில் ஈடுபடுவோர்க்கு மக்கள் மன்றம் முன் நன்மதிப்பும், உயர் மரியாதையும், தரமான அங்கீகாரமும் நிலைக்கும். நவகிரகங்களின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுள்ளோர் வாழ்வு வளம் பெறும்.
இதேபோல விநாயகரின் ஸ்ரீ மஹா கணபதி காரிய சித்தி மாலை பூஜிப்போர்க்கு நினைத்த காரியம் உடனே சித்தியாகும். விநாயகக் கவசம் மற்றும் விநாயகர் அகவலுக்கு கூட தனிதனி மூல மந்திரங்கள், யந்திரங்கள் பூஜை முறைகள் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தேவதையை பல காரண காரியத்திற்கு ஒருவர் பூஜை முலம் மனம் இறங்கச் செய்து வசியம் செய்து வளம் பெற முடிகிறது. ஒருவர்க்கு உலகியலில் அருள், பொருள் பேதமின்றி வேண்டுவன யாவையும் கோரும் வண்ணம் சேரும் வகையில் சித்தர் அடியார் டாக்டர் கி.ரி.சந்தன இராஜா ஐயா அவர்கள் அருமையான விளக்கங்களுடன் தனது அனுபவத்தையும் ஆதாரத்துடன் அருள் உலகுக்கு ஆற்றி பெரும் சேவை புரிந்துள்ளார்.
இவ்வாறு 51 சக்தி வடிவத்தில் வாலை முதல் புவனாபதி வரை பல மூலமந்திரங்கள் யந்திரங்கள் முதன்முறையாய் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு கோடான கோடி மக்கள் நாள்தோறும் வணங்கி படித்து வரும் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம், கந்தர்கலி வெண்பா, கந்தரனுபூதி என இன்னும் முருகப் பெருமான் வடிவங்களுக்கு யந்திரங்கள் மூலமந்திர பூஜை முறைகள் தரப்பட்டுள்ளன. சிவபெருமான், நாராயணன் என அனைத்து தெய்வங்களின் சூட்சுமங்கள், வணங்கி அருள் பெறும் எளிமையான விதங்கள் மற்றும் பலாபலன்களும் விரிவாய் கொடுக்கப்பட்டுள்ளது.
நோய் கானும் மருத்தவன் மருந்து கூறவும் குணம் பேணவும் வேண்டும் என்பது போல பலன் கூறும் ஜோதிடர்களின் வாக்கு பலித்தமாகவும், பரிகாரம் தகுந்த முறையில் பரிந்தளிக்கவும், பிறர் கர்மா மூலம் பாதிப்புறாது இருக்கவும். ஸ்ரீ நவகோள் சாப விலக்கு மகா மந்திர விஞ்ஞை, நவக்கோள¢ தாக்கம் தணிக்கும் மந்திர விஞ்ஞை, நவக்கோள் மகா மந்திர விஞ்ஞை, நலம் தரும் நவக்கோள் மந்திர விஞ்ஞைகள் என பல விஞ்ஞைகள் நவகிரகங்களை பூஜீத்து பலன் பெற, வாக்கு பலித்தம் பெற தரப்பட்டுள்ளது. இது தவிர இதுவரை வெளிவராத இரகசியங்களாய் நெருப்பாறும் மயிர் பாலமும், பூட்டிய வாசலும் அதன் திறவுக் கோலும், இறைவனின் எண் குண இயற்கை மந்திரம், ஐ எழுத்தும் ஐ விரலும், மானுட ஆவி இயல், ஆகாயம் ஆன்மிக உலகத்திற்கு சகாயம், மானுடத்தில் நவக்கோள் குடியிருப்பு என 48 தலைப்புகளில் படைக்கப்பட்டுள்ள அற்புதங்கள் ஒருவர் படித்திட நிச்சயம் மிகபெரிய குருவாகவும், சகல விதமான அருட் செல்வங்களும் பெற முடியும்.
சித்தர் அடியார் டாக்டர் கி.ரி.சந்தன இராஜா ஐயா அவர்கள் இயற்றிய "மகத்துவம் தந்திடும் மஹா மந்திர விஞ்ஞைகள்" காலத்தால் அழியாத பொக்கிஷம். அவர்தான் கண்ட இறை சக்தியை யந்திர, மந்திர வடிவில் எல்லோரும் முறைப்படி பூஜைகள் செய்து வணங்கி எல்லா மேன்மையும் உலகியலில் பெற தன் வாழ்நாள் முழுவதையும் அற்பணித்துள்ளார். இந்நூல் ஒரு சரித்திரம் ஒரு சகாப்தம். எனவே ஆன்மிக அன்பர்கள், ஜோதிட பெருமக்கள், ஆலய குருக்கள், புரோகிதர்கள், நமபூதிரிகள், வேத விற்பனர்கள், சமயம் சார்ந்தோர்கள், மந்திர, தந்திர, யந்திர நிபுணர்கள் என பாகுபாடின்றி யாவரும் வாங்கி பரம்பொருளை பரிபூரணமாய் வணங்கி பயன் பெற வாழ்த்துக்கள்.
|